கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் அனைத்து பொது மக்களுக்குமான அறிவித்தல்.தற்போது நாடு முழுவதும் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு வேலைத்திட்டமானது நடைபெற்று வருகின்றது,அந்த வகையில் எமது பிரதேச செயலக பிரிவிற்குள்ளும் கடந்த மாதம் குறிப்பிட்ட வேலை திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் தொகை மதிப்பிற்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு தரப்பட்ட வரைபடங்களில் அம்பாறை மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கமைய கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் எனக் குறிப்பிடப்பட்டதால் பொதுமக்களின் எதிர்ப்பில் குறிப்பிட்ட வேலைத் திட்டமானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே,

இந்த நிலையில் அம்பாறை மாவட்ட செயலாளர் அவர்கள் தனது முடிவை மாற்றிக்கொண்டு வரைபடங்களில் காணப்படும் பிழைகளை திருத்தி புதிய வரைபடங்களை தயாரித்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்,

இந்த நிலைமையில் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் நாளை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளனர்.


நன்றி.
அனைத்து சிவில் அமைப்புகள்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு