கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பிறந்த தினத்தினை நத்தார் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் ஒளிவிழாக்கள், கரோல் கீதங்கள், குடும்ப சந்திப்புகள், நத்தார் பாப்பா கிராமங்களில் சென்று மக்களை மகிழ்வித்தல், போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருவது வழமை, அந்த வகையில் கல்முனை மெதடித்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 17- 12 – 2023 ஞூயிற்றுக்கிழமை அன்று கல்முனை மெதடிஸ்த திருச்சபையில் அருட்திரு ரவி முருகப்பிள்ளை போதகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
போதகரின் ஜெபத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பாடகர் குழுவினர் பவனி உலா வந்து திருச்சபையில் இனிய காணங்களை இசைத்தனர்.
பாடகர் குழுவில் மெதடிஸ் த திருச்சபையின் ஞாயிறு பாடசாலை மாணவ மாணவிகளும், திருச்சபையின் பெண்கள் சங்கம், திருச்சபையின் ஆண்கள் சங்கம் மற்றும் சபையை சேர்ந்தவர்களாலும் இயேசுவின் புகழ் சொல்லும் இனிய கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டன. மற்றும் “வார்த்தைகளால் இணைவோம்” என்ற தலைப்பில் திருமதி J.மனுலா, திருமதி மகேஸ்வரி, திருமதி, P.டிலானி, திருமதி T.விஜிதா காந்தி, திருமதி J.செல்வ ரஞ்சனி ,திருமதி T. லோகராஜா ஆகியோரினால் வேத வசனங்கள் வாசிக்கபட்டது.
அதேபோன்று ஓய்வு பெற்ற அதிபர் V.பிரபாகரன் அவர்களால் “சமகால வாசிப்பு கேட்டிடுவோம்” என்ற தலைப்பில் கருத்துரையும் இடம்பெற்றது.
அருட் செல்வி A. சுலோஜினி அவர்களால் “இயேசுவின் வார்த்தைக்குள் வாழ்வோம்'” என்ற பொருளில் வேத போதனைகள் வழங்கப்பட்டது.இறுதியாகஅருட்திரு ரவிமுருகுப்பிள்ளை போதகரின் ஆசீர்வாத ஜெபத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.