பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா?
பா.அரியநேத்திரன் மு.பா.உ,
கிழக்குமாகாணத்தில் அடுத்த 2024, ஜனவரி மாதம் கோடிக்கணக்கான நிதியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா நடத்த ஏற்பாடு நடைபெறுவதை அறியமுடிகிறது நில அபகரிப்பும், பண்ணையாளர்களின் மாடுகள் மயிலத்தமடு மேச்சல் தரையில் தினமும் கொலைசெய்யும் நிலைமையும், தொடரும்போது அதனை தடுக்காமல் ஆடம்பரமான பாரிய மகா பொங்கல் விழா ஒன்று அவசியமா என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உழவருக்கு அடிப்படையான விழா பொங்கல் விழா சூரியனுக்கு நன்றி தெரிவுப்பதும் உழவர்களுக்கான விழாவாகவும். கால்நடைகளான பசு மாடுகளை வணங்கும் விழாவாகவும் தமிழர்கள் பொங்கல் விழாவை செய்வது வழமை.
ஆனால் தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகள் மேச்சல் தரையான மயிலத்தமடு, மாதவனை மகுதியில் பெரும்பான்மை சிங்கள குண்டர்களால் வாய்பேசா சீவன்களை கொலை செய்யப்படுகிறது இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் பி்மாண்டமான பொங்கல் விழாவை நடத்தி அதில் எந்த பயனை பெறலாம்.
வழமையாக சம்பிரதாயத்துக்கான ஒரு பொங்கல் விழா செய்வதில் தவறில்லை.
ஆனால் இந்தப்பொங்கல் விழாவின் நோக்கம் இலங்கை வரலாற்றில் ஒரே இடத்தில் 1008, பொங்கல் பானைகள் பொங்கி ஒரு பிரமாண்டமான பொங்கல் விழாவாக சர்வதேச அரங்கில் காட்டப்பட்டு முடிந்தால் கின்னஷ் புத்தகத்தில் இடம்பெறவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கருதி இதனை ஒழுங்கு செய்யும் வேலைகள் தற்போது இடம்பெறுகிறது.
இதற்காக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து 1008, மாணவிகளை தயார் படுத்துமாறும் சம்மந்தப்பட்ட திணைக்களத்திற்கு பணிக்கப்பட்டுள்ளது.
இதைவிட தென்னிந்திய கலை நிகழ்வுகளும் வரவழைக்கப்படவுள்ளதாகவும், திருகோணமலை யில் கடற்கரை பகுதியை அலங்கரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உண்மையில் தமிழர்களின் பாராம்பரியம். கலை பண்பாடு, உழவர்களின் சூரியபொங்கல், தமிழர் திருநாள் என்பவைகள் நிச்சயமாக செய்யப்படவேண்டும், அப்போதுதான் அடுத்த சந்ததிக்கு அதை கொண்டுசெல்லமுடியும் வருடாவருடம் அதனை அனவரும் செய்யவேண்டும் அதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம், மின்கட்டண உயர்வு, எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அரச ஊழியர்களுகளுக்கு எதிர்கார்த்த சம்பள உயர்வு இல்லை, உழவர்களின் வயல் நிலங்களில் விவாசாயம் செய்கைகள் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை, தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா ஆனால் மாடுகள் கூட கிழக்குமாகாணத்தில் சுதந்திரமாக மேயவிடாமல் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறி குடியேறி மாடுகளை தினமும் வெட்டியும், சுட்டும் கொலைசெய்யும் அவலம் தொல்பொருள் திணைக்களத்தினால் அகல்வாய்வு என்ற போர்வையில் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், புத்தர் சிலைகள் பன்சாலைகள் என தமிழர் நிலங்களில் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் என சொல்லவண்ணா துன்பமும் அவலம் தொடர்ந்து செல்கிறது இவைகளை அரசால் தடுக்கமுடியவில்லை. இவ்வாறான நிலையில் மிகப்பெரிய பிரமாண்டமான ஆடம்பரமான பொங்கல் விழா தேவையா?
என்பதை சிந்திக்கவேண்டும் கனவைம் மேலும் கூறினார்.