மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம்.
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை கிறிஸ்டல் விளையாட்டு கழகம் அதன் 30வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்த கழகத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் “கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம் – 2023” நிகழ்வு கழகத்தின் நிறைவேற்று தலைவர் எம்.ஐ. நுபைறுடீன், மற்றும் கழகத்தின் தலைவர் டொக்டர் எம்.ஏ.எம்.அஸீம் ஆகியோரின் தலைமையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர்க்கொத்தன் கலையரங்கில் (10) நடைபெற்றது.
கழகத்தின் பொதுச்செயலாளர் எச். எம். சுஹைப் ஒருங்கிணைப்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில் கிறிஸ்டல் விளையாட்டு கழகத்தின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்த கழக உறுப்பினர்களின் உறவுகளாக வலம் வந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்த மாணவர்கள், உயர்தர பரீட்சையில் உயர்ந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் போன்றோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிறிஸ்டல் விளையாட்டு கழகத்தின் உயர் பீட உறுப்பினர் ஏ.சி.ஜஹாங்கீர் இலங்கை அதிபர் சேவை போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அதிபராக பதவி உயர்வு பெற்றதை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி இங்கு கெளரவிக்கப்பட்டார். அதேபோன்று கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து செயற்பட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட உறவுகளுக்கு நினைவு கூர்ந்து நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். இதில் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் உரையாற்றியதுடன், நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் தொகுத்து வழங்கினார்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/DSC_8853-1024x727.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/DSC_8801-1024x730.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/DSC_8820-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/DSC_8774-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/DSC_8851-1024x679.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/12/DSC_8836-1024x683.jpg)