-வடிவேல் டினேஸ்-
புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் கல்முனை வடக்கு உப செயலகம் என்று இருந்ததால் மக்கள் கடும் எதிர்ப்பு!
புள்ளிவிபரவியல் திணைக்களத்தனால் மக்களது புள்ளி விபரங்கள் தற்போது பிரதேச செயலக வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று (12) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இன்று புள்ளி விபரங்கள் சேகரிக்கும் போது மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாத கல்முனை பிரதேச மக்கள் நீதி கோரி இன்று காலை மழைக்கு மத்தியில் வீதியிலிறங்கினர்.
இதன் போது கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்.
நாங்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிரானவர்கள் அல்ல கல்முனை வடக்கு என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாகும் என தெரிவித்தார்.
இதனை உப பிரதேச செயலகமாக மாற்றுவது என்றால் மீண்டும் ஓர் அமைச்சரவை தீர்மானம் தேவை உப பிரதேச செயலகம் என ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்.
இது தொடர்பில் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிராமசேவகர் ஊடாக குறித்த விடையம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததுடன் இது தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டதுடன் புள்ளிவிபரம் சேகரிப்பை நிறுத்தியுள்தாகவும் தெரிவித்தார்.