சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினம்.
சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு நாள் எனும் தொனிப்பொருளிலான கண்டன பேரணி ஒன்று இன்று காலை 10 மணி அளவில் திருக்கோவில் தம்பிலுவில் பொதுச் சந்தை கட்டிடத்திலே அமைந்திருக்கின்ற அவர்களின் அலுவலகத்தில் இருந்து கோஷங்கள் பதாகைகளோடு பேரணியாக பிரதான வீதி ஊடாக வருகை தந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுர சந்தியில் நின்று இந்த நாட்டிலேயே மனித உரிமை என்ற ஒன்று கிடையாது என்பதையும் இந்த நாட்டினுடைய அரச பாதுகாப்பு படையினர் போலீசார் புலனாய்வாளர்களுடைய தொல்லைகள் தொந்தரவுகள் தமக்கு இருப்பது பற்றியும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கான நீதியைக் கோரியும் பல்வேறு நியாயபூர்வமான கோரிக்கைகள் கோஷங்களை முன்வைத்து குரலெழுப்பினர்
அத்தோடு இந்த நாட்டிலே தங்களுக்கு உரிய மனித உரிமை இல்லை அது மறுக்கப்படுகிறது தங்களுடைய குரல்வளை நசுக்கப்படுகிறது என்பவற்றை வெளிப்படுத்தும் விதமாக தங்களுடைய கைகளை கறுப்புத் துணியால் கட்டியவாறு ஒரு நூதனப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்கள்
அதனோடு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தப்பிராசா செல்வராணி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் அந்த இடத்திலே செய்திருந்தார் அதிலே இந்த நாட்டிலே தங்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுகின்ற தங்களுக்கு இடம்பெறுகின்ற பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தல்கள் போன்றவைகளை விவரித்ததோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வலியுறுத்தி வேண்டிக் கொண்டதோடு சர்வதேச மனித உரிமைகள் தினத்திலே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நீதி மையங்கள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்ததோடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆவதால் மனித உரிமை அலுவலகம் மூடப்பட்டிருப்பதனாலும் நாளைய தினம் திங்கட்கிழமை தங்களுடைய சார்பிலே மகஜர் ஒன்றினையும் கையளிக்க இருப்பதாகவும் தன்னுடைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூறியிருந்தார்.
அத்தோடு அவர்களோடு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து இருந்ததோடு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களும் இவர்களோடு இணைத்திருந்ததோடு ஊடகவியலாளர் சந்திப்பிலே அவரும் இணைந்து தனது கருத்துக்களையும் இவ்வாறு தெரிவித்தார் ,இந்த நாட்டிலே சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தப்படுகின்ற விடயம் புலனாய்வாளர்ளுடைய தொல்லைகள் பின் தொடர்தல் தேவையற்ற முறையிலான நீதிமன்ற வழக்குகள் விசாரணைகள் போன்றவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த சர்வதேச மனித உரிமைகள் தினம் எங்களைப் பொறுத்த வரையிலே ஒரு கறுப்பு நாள் என்பதையும் அவரும் வலியுறுத்தியதோடு சர்வதேச நீதி துறைகளிடம் தங்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்ற ஒரு முறைப்பாட்டையும் இந்த இடத்திலே அவரும் மேற்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர்களோடு பல சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.