பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு!


பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாமும் மற்றும் நடமாடும் சேவையும் நேற்று (24) இடம் பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களது வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் அவர்களின் திட்டமிடலின்கீழ் சமூக சேவை பிரிவின் ஒழுங்கமைப்பில் பெரியநீலாவணை 01ஏ பிரிவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டடத்தில் இடம்பெற்ற இம்மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் சேவையில் சுகாதார சேவைகள், வெளிநோயாளர் பிரிவு சேவைகள், பல் மருத்துவம், தொற்றா நோய்கள் தொடர்பான சிகிச்சைகள் இரத்த பரிசோதனைகள் , ஆயுள்வேத மருத்துவ சேவைகள் என்பவற்றுடன் சமூக சேவை திணைக்கள சேவைகள் மற்றும் உளவளத்துணை சேவைகள் என்பனவும் இடம்பெற்றன.

பெருமளவான பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெறும் இம்மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் சேவைகளுக்கான மருத்துவ சேவைகளை கல்முனை வடக்கு பிரதேச சுகாதார பணிமனை மற்றும் பெரியநீலாவணை மந்திய ஆயுள்வேத மருந்தக வைத்தியர்களும் அவர்களது பணிக்குழாமும் அதேபோல் சமூக சேவை திணைக்கள மற்றும் உளவளத்துணை தொடர்பான சேவைகளை கல்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களப் பிரிவும், உளவளத்துணை பிரிவும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.