தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் “கார்த்திகை வாசம்” நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (22) ஆரம்பமானது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அவைத் தலைவர் சி. வி. கே சிவஞானத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
கௌரி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இத் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்புரைகளை வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் வழங்கினர்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்ப்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக்கண்காட்சி இம் மாதம் 30 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.