பலர் என்னிடம் ஈழவிடுதலைப்போராட்டத்தில் 36, இயக்கங்கள் ஆரம்பத்தில் இருந்ததாக அடிக்கடி கூறுகிறீர்களே..
அந்த இயக்கங்களின் பெயர்களை தரமுடியுமா.. ? என கேட்டனர்.
இதுவே அந்த 36, இயக்கங்களின் பெயர்களும்..!
👉ஈழவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த 36, ஈழவிடுதலை இயக்கங்கள் விபரம்..!
- தமிழீழ விடுதலைப்புலிகள்-LTTE.
- ஈழம் புரட்சிகர அமைப்பு-EROS.
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-EPRLF.
- ஈழமக்கள் விடுதலை முன்னணி-EPLF.
- ஈழம் தேசிய விடுதலை முன்னணி-ENLF.
- ஈழ ஆய்வு நிறுவனம்-ERO.
- ஈழத்தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி-ENDLF.
- ஈழ விடுதலைப்பாதுகாப்பு முன்னணி-ELDF.
- ஈழ விடுதலைப்புலிகள்-ELT.
- ஈழ விடுதலை அமைப்பு-ELO.
- கழுகு இயக்கம்-EM.
- தமிழ் ஈழ கெரில்லா இராணுவம்-GATE.
- இலங்கை சுதந்திர தமிழ் இராணுவம்-IFTA.
- தமிழீழ தேசிய விடுதலை முன்னணி-NLFT.
- தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம்-PLOTE.
- மக்கள் விடுதலை கட்சி-PLP.
- தமிழ் ஈழவாதிகளின் செம் முன்னணி-RFTE.
- புரட்சிகர போரேருகள்-RW
- செம்பிறை கெரிலாக்கள்-RCG.
- புரட்சிகர ஈழ விடுதலை இயக்கம்-RELO
- சோசலீச புரட்சிகர சமூக விடுதலை-SRSL.
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-TELO.
- தமிழ் ஈழ விடுதலை முன்னணி-TELF.
- தமிழ் ஈழ விடுதலை இராணுவம்-TELA.
- தமிழ் ஈழத்தேசிய இராணுவம்-TENA.
- தமிழ் ஈழ இராணுவம்-TEA.
- தமிழ் ஈழ விடுதலைத்தீவிரவாதிகள்-TELE.
- தமிழ் ஈழ விடுதலைக்கெரிலாக்கல்-TELG.
- தமிழ் ஈழ பாதுகாப்பு முன்னணி-TEDF.
- தமிழ் ஈழ கழுகுகள் முன்னணி-TEEF.
- தமிழ் ஈழக்குருதி இயக்கம்-TEBM.
- தமிழ் ஈழ பாதுகாப்பு சேவைகள்-TESS.
- தமிழ் ஈழ விடுதலை நாகங்கள்-TELC.
- தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி-TPSF.
- தமிழ் மக்கள் ஆணைப்பிரிவு-TPCU.
- தமிழ் மக்கள்சனநாயக முன்னணி-TPDF.
ஆகிய 36, விடுதலை இயக்கங்கள்
🖕🏿ஆனால் 1987, யூலை,29, இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைபெற்ற பின்னர் “தமிழீழ விடுதலைப்புலிகள்” மட்டுமே கொள்கை தவறாமல் விடுதலைக்காக போராடினர்.!
✋🏿ஏனய இயக்கங்களில் …
தமிழீழ விடுதலை இயக்கம் TELO. தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம்-PLOTE. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-EPRLF.
🖕🏿ஆகிய மூன்று இயக்கங்களும் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிந்து தேர்தல் அரசியல் நீரோட்டத்தில் பயனித்தது.
🔻ஈழம் புரட்சிகர அமைப்பு-EROS.
இந்த இயக்கம் தானாகவே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்தது செயல்பட்டது.!
👋🏽தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976,மே,05,ல் தொடங்கப்பட்டது.
2009, மே,18, வரை 33, வருடங்கள் அற்பணிப்பு, வீரம், தியாகம், சாதனை, ஒழுக்கம், ஆகியவற்றுடன் தந்தை செல்வா 1976, மே,14,ல் வட்டுக்கோட்டையில் எடுத்த தீர்மானத்தை அடைவதற்காக போராடினார்கள் என்பது வரலாறு..❗️
-பா.அரியநேத்திரன்-
21/11/2023