தமிழரின் கலை கலாசாரத்தை கொச்சைபடுத்திய மௌலவிக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரின் முறைப்பாடு வருமாறு

ஹமீத் மெளலவி என அறியப்படுகிற ஒரு நபரின் வீடியோ பதிவில் நாகரீகமற்ற முறையில் பெண்களை பேசியிருப்பதோடு தமிழர்களின் கலைகளில் முதன்மைக் கலையாகவும் கலாசாரமாகவும் பண்பாடாகவும் இருக்கின்ற பரதக்கலையையும் அதை நேசிக்கும் கலைஞர்களையும் பெண்களையும் தமிழ்ச் சமூகத்தையும் சைவத் தமிழர்களையும் நிந்திக்கும் வகையில் அவதூறாகப் பேசிய குறித்த நபருக்கெதிரான அடிப்படை உரிமை மீறல் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் விதமானதும் வெறுக்கத் தக்கதுமான பேச்சு போன்ற முறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளைக் கடந்த 23 ம் திகதி ஆரம்பித்திருந்தேன்.

அதுபற்றி என் இஸ்லாமிய நண்பர்கள் உறவுகளோடும் சில நல்ல மெளலவிகளோடும் சட்டத்துறை மற்றும் காவல்துறை மனித உரிமைசார் செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளுடன் பேசி ஆலோசித்து நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளேன்.

இது மனிதனை மனிதன் மதிக்கவும் அவரவர் உரிமைகளின் மீது தலையீடு செய்யாமலும் ஒற்றுமைக்கும் நல்லுறவுக்கும் குந்தகம் ஏற்படாமலும் மீள்நிகளாமையினை உறுதி செய்யவுமே.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வணக்கம்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகவும் அதிகமான கருத்து முரண்பாடுகளை இன நல்லுறவுகளைச் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளையும் தூண்டக்கூடியதாக வெளியிடப்பட்டிருக்கின்ற ஒரு வீடியோ தொடர்பிலான முறைப்பாடு

குறித்த வீடியோ காட்சியிலே பேசுகின்ற இஸ்லாமிய மதகுருவான ஹமீத் மௌலவி என்று அறியப்படுகிற அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒரு மௌலவி இந்த காணொளியை வெளியிட்டு இருக்கிறார் (காணொளியும் அது வெளியான முகநூல் முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது) அந்த அடிப்படையிலேயே அந்த காணொளியிலே குறித்த இஸ்லாமிய மத குருவான மௌலவி தான் சார்ந்த சமூகத்தினுடைய ஆசிரியர் ஒருவர் ஒரு பாடசாலையிலே பாடசாலை மாணவர்களோடு இணைந்து நடனம் புரிந்திருக்கிறார் என்றும் அந்த நடனம் பரதநாட்டியம் என்றும் குறித்த பரதநாட்டியம் என்பது வேசைகளின் நடனம் என்றும் பொது வெளியிலே நாகரீகம் அற்ற முறையிலே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
அந்த பேச்சிலே பரதநாட்டியம் என்பது பரத்தைகள் உடைய நடனம் என்றும் அந்த பரத்தைகள் எனும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆடும் நடனமே பரதநாட்டியம் என்றும் அந்த பரதநாட்டியம் என்பது அந்த காலங்களிலே மன்னர்மாருக்கு முன்பாக அழகிய பெண்கள் ஆடி மன்னன்மாரை குஷி படுத்தவும் அவர்களுக்கு பாலுணர்வை தூண்டுவதற்குமாக ஆடப்பட்டதாகவும் மிகத் தவறான ஒரு புரிதலோடு மிகத் தவறான ஒரு காணொளியினை வெளியிட்டிருக்கிறார் என்பதையும் கூறுவதோடு இவ்வாறு ஒரு இனத்தின் அல்லது மதத்தின் கலை கலாசார நம்பிக்கையினை அவமதித்து இழிவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிப்பதோடு

இந்த காணொளியிலே அவர் குறிப்பிட்டிருப்பது போன்று பரத்தைகள் எனும் சமூகம் ஆடுகின்ற நடனம் பரதநாட்டியம் கிடையாது என்பதையும் பரதக்கலை என்பது 64 கலைகளிலும் சிறந்த ஒரு கலையாக காணப்படுகிறது என்பதையும் அதனால்தான் அந்தக் கலையினுடைய நாயகனாக சைவத்த தமிழர்களுடைய முழுமுதற் கடவுளான சிவபெருமான் காணாப்படுகிறார் ஏன்பதோடு நடராஜர் உருவத்திலே அவர் இந்த கலையினை வெளிப்படுத்துகிறார் என்பதையும் அவ்வாறான எம் புனிதக் கலையினையும் இந்தக் கலையினுடைய அடையாளமான நடராஜர் பெருமானை வழிபடுகின்ற சைவத் தமிழர்களுடைய மரபையும் கலை கலாச்சாரத்தையும் அவர்களுடைய மத நம்பிக்கையினையும் நிந்திக்கும் விதமாக இந்த மௌலவி வெளியிட்டிருக்கிற இந்த கருத்து மிகவும் வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது என்பதையும் கூறுவதோடு,

பரதநாட்டியத்தையும் பரத்தைகளுடைய நடனத்தையும் ஒப்பிட்டு பேசுகின்ற அளவிற்கு இவர் அதிலே புரிதல் கொண்டவரா என்ற சந்தேகமும் இருக்கிற அதே நேரம் இன்னொரு மதத்தினை நிந்திக்கும் வகையிலே இன்னுமொரு மதத்தினுடைய கலாச்சாரம் கலை அதனுடைய நம்பிக்கையினை விமர்சித்து பொது வெளியிலே நிந்திக்கின்ற வகையில் இவ்வாறு காணொளிகளை வெளியிடுவது என்பது மிக மிகத் தவறான ஒரு விடயமாகும் என்பதோடு அது வேசைகளுடைய நடனமாக இருந்தாலும் சரி அது மன்னன்மாருக்கு பாலுணர்வைத் தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட நடனமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அது சைவத் தமிழர்களுடைய மத நம்பிக்கை அது அவர்களின் கலை அதைப்பற்றி விமர்சனம் செய்ய இன்னும் ஒரு சமூகத்தினுடைய மதகுருவான இவருக்கு என்ன அருகதையும் தகுதியும் இருக்கிறது அது வேசையுடைய நம்பிக்கையாக இருந்தாலும் சரி என்ன நடனமாக இருந்தாலும் சரி அது ஒரு சமூகத்தினுடைய ஒரு இனத்தினுடைய ஒரு மதத்தினுடைய கலை கலாசாரமாக இருக்கும் பட்சத்தில் அதை எவ்வாறு இவர் விமர்சிக்கலாம் இவருக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தார்கள்?
என்பதையும் கேட்பதோடு இவர் இவருடைய மதத்தைச் சார்ந்தவர்களை திருத்துவதற்கு அல்லது அது சார்ந்து பேசுவதற்குரிய அதிகாரம் அவருக்கு அவர்களுடைய மக்கள் வழங்கி இருந்தால் அதை அவ்வாறு அவர் செய்ய வேண்டும் செய்யலாம் அதைத் தவிர எங்களுடைய மதத்தை எங்களுடைய நம்பிக்கையினை விமர்சிக்கின்ற தகுதி இவருக்கு கிடையாது என்பதையும் கூறி இதைக் கண்டிப்பதோடு இவ்வாறான மதகுருக்களை ஒரு மதத்தினுடைய வழிகாட்டியாக கொண்டிருக்கின்ற அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டும் முடிவெடுக்க வேண்டும் இவ்வாறானவர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கக் கூடியவர்களாக என்பதையும் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலே இன நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையிலே தன்னுடைய காணொளியை வெளிப்படுத்தி இருக்கிற இந்த மெளலவி குறித்த விடயத்திற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்,

இதேபோன்று இந்த நாட்டில் வாழும் பல சமூகங்களுக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கையும் கலை கலாசாரமும் காணப்படுகிறது விஷேடமாக சிங்களவர்களுடைய கண்டியன் நடனம் போன்றவைகளையும் குறிப்பிடலாம் அவ்வாறு இன்னும் ஒரு சமூகத்தின் இனத்தின் மதத்தின் கலை கலாச்சாரத்தை நிந்திக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு இன்னுமொரு மதத்தை அந்த மதத்தினுடைய நம்பிக்கையினை கலை கலாச்சாரத்தினை மிக இழிவாக விமர்சிக்கும் இவ்வாறான மௌலவிகள் மதகுருக்கள் இந்த நாட்டிலே ஏனைய குறிப்பாக சிங்கள மக்களுடைய பெளத்த மதத்தவர்களுடைய நடனம் போன்றவைகளை இவ்வாறு பொது வெளியில் விமர்சிக்க முடியுமா விமர்சித்திருந்தால் இன்று என்ன நேர்ந்திருக்கும் என்பதையும் இவரும் இவரைப் போன்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதோடு இதேபோல் இஸ்லாமிய மத நம்பிக்கையினையும் உங்கள் கலை கலாசாரத்தையும் இவ்வாறு இழிவாகப் பேசினால் எவ்வாறு இருக்கும் என்பதையும் உணர வேண்டும் என்றும் இஸ்லாமிய மதகுருக்களாக இருக்கிற மௌலவிகள் சிலர் பயான் எனும் பெயரில் மிகவும் மோசமாக ஏனைய மதத்து நம்பிக்கைகளையும் ஏனைய மதத்தவர்களின் கலை கலாச்சாரத்தையும் நிந்திக்கும் விதமாக செய்கின்ற பயான்கள் தொடர்பிலும் மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கையினுடைய நீதித்துறையும் மனித உரிமை ஆணையகமும் கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறானவர்கள் தடை செய்யப்பட வேண்டும் இவர்களுடைய பயான்கள் தொடர்பிலே அவதானோடு இருக்க வேண்டும் என்றும் கூறுவதோடு இன மத நல்லுறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த நாட்டினுடைய ஒற்றுமையும் எதிர்காலமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் எனது கோரிக்கையினையும் இதிலே முன்வைக்கின்றேன்.

இஸ்லாமிய மக்களும் சிந்தித்து இவ்வாறானவர்கள் எங்களுக்கு மத குருக்களாக இருக்கக்கூடியவர்களா என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு இலங்கை நாட்டினுடைய சட்டங்களின் பிரகாரம் ஐசிசி பிஆர் போன்ற சட்டங்களின் பிரகாரம் இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு ஒரு இனத்தின் ஒரு மதத்தின் ஒரு சமூகத்தின் ஒரு கலை கலாச்சாரத்தின் மீது இவர் வெளிப்படுத்தியிருக்கிற இவ்வாறான காணொளிக்காக மனித உரிமை ஆணையகமும் தலையீடு செய்ய வேண்டும் ஒரு சமூகத்தினுடைய உரிமையும் நம்பிக்கையும் கலாசாரமும் நிந்திக்கப்பட்டு அல்லது மீறப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய சமய கலாச்சார திணைக்களம் இவர் மீது நடவடிக்கை எடுக்க ஆவணை செய்ய வேண்டும் எனவும் இலங்கையினுடைய துறை சார்ந்த அதிகாரிகள் காவல்துறையினர் சட்டத்துறை மனித உரிமைத் துறை சார்ந்தவர்களும் இவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவணை செய்ய வேண்டும் என்றும் எங்களுடைய கலை கலாசாரத்தை நிந்திக்கும் இவரது இந்த காணொளிக்கான எனது கண்டனத்தை தெரிவிப்பதோடு இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தயவாக கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.
தாமோதரம் பிரதீவன்
மனித உரிமை செயற்பாட்டாளர்
அம்பாரை மாவட்டம்.