மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு

கலைஞர்.ஏஓ.அனல்

“சகாக்களின் அழுத்தத்தை சமாளித்தல்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலய அதிபர் திரு. ரீ. ஈஸ்வரன் தலைமையில் நேற்று (7/11/2023) மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது. தரம் 10 இல் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இச்செயலமர்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் டொக்டர.வீ.சிந்துஜன், உளநல மருத்துவ சமூகப் பணியாளர் திரு.என்.நித்தியானந்தன், உளநல சமூகப் பயிற்சி பணியாளர் திரு.எம்.ஏ.அப்துல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் திரு.எஸ்.தவேந்திரன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.