திருமூலர் குருபூசை விழா 2023.


திருமூலர் பெருமானின் குருபூசை தினமான 28/ 10/ 2023 இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதி எங்கும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார பிரிவின் வழிகாட்டலில், சிவ தொண்டர் திருக்கூடம் மட்டக்களப்பு, திருமூலர் போக அறச்சாலை, கனடா ஆன்மீகத்திண்ணை, நடராஜர் சைவ சித்தாந்த பயிற்சி மையம், உதவும் கரங்கள் நிறுவனங்கள் இணைந்து,
இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு. ஆன்மீக ஊர்வலம். திருமூலப் பெருமான் குருபூசை, கலாச்சார போட்டிகள். சிவ சின்னங்கள் வழங்குதல். ஆன்மீக கருத்துரைகள். அன்னதான நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். எதிர்வரும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனை

பெரியநீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையிலும் மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடத்துடன் இனைந்து பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பும் இந்நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் தலைவர் என். சௌவியதாசன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.