மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை

கலைஞர்.ஏஓ.அனல்

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில்
மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஜெகநாதன் திலோஜா பிரிவு 5 இல் கட்டுரை வரைதல் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். அம்மாணவியை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று (1) பாடசாலை அதிபர் திரு. து.சபேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக பட்டிருப்பு வலயத்தைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கு.திருச்செல்வம் அவர்கள் கலந்துகொண்டதோடு, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்த நற்பிரஜைகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கல்வியோடு கலையிலக்கியம் மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டிவரும் இம்மாணவி இவ்வருடம் நடைபெற்ற அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டியிலும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.