-பெரியநீலாவணை எஸ் .அதுர்சன்-

பசுமையான  கல்முனை மாநகர  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின்   மற்றுமொரு நிகழ்வு பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் பெரியநீலாவணை இந்து மயானத்தின் தெற்கு வீதியில் இன்று (28) நடைபெற்றது.

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் K.M.K வீரசிங்க தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.


இதன் போது இந்து மயான அபிவிருத்தி ஒன்றிய நிருவாகத்தினர்,ஆலய பரியாலன சபையினர்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் சூழலை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ்  பொது இடங்கள்,  கடற்கரைப் பிரதேசங்கள்,  அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்,  மத ஸ்தாபனங்கள்,வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொலிஸாரினால் மரநடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.