இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
–பெரியநீலாவனை எஸ். அதுர்சன்-
பெரிய கல்லாற்றைச் சேர்ந்த இருவர் நேற்றும் இன்றும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரம்
பெரிய கல்லாறு மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த நிலக்சன் கிருபாகரன் என்பவர் வெல்லா வெளி பிரதேச பொறுகாமம் பகுதியில் இருந்து நேற்று (25)சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர்வெல்லாவெளி சமூர்த்தி வங்கியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பெரிய கல்லாறு 2ச் சேர்ந்த கனகசபை முரளிதரன் வீட்டில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் இவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் துப்புரவு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடமை புரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


