சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 இந்தியாவின் ஆட்சேபனையையும் மீறி நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
ஷி யான் 6 இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ இதேபோன்ற பயணமாக, தென் இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டைக்கு வந்தடைந்தது.
இந்தியப் பெருங்கடலில் சீனா என்ன ஆராய்ச்சியை மேற்கொள்கிறது?
கடந்த பத்தாண்டுகளாக, இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் தனது கடல் ஆதிக்கத்தை விரிவுப்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக, சீனா இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருகிறது.
சீனக் கடற்படையின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடல் பாதைகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடல் படுக்கை ஆராய்ச்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
ஷி யான் 6 ஐப் பொறுத்த வரையில், இந்தக் கப்பலை கொழும்பில் நிறுத்த அனுமதிக்கப்படுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த கப்பல் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
எனினும், சீனா இந்த இரட்டை நோக்கக் கப்பலை கொண்டு கடல்சார் ஆய்வுக்கு மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் ஆய்வு செய்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை சீனாவுக்கு சுமார் 7 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் நாடு, கடன் சமபங்கு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியுள்ளது.
சீனாவை வேண்டாம் என்று இலங்கையால் கூற முடியாது.
ஏனெனில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டை மேலும் நெருக்கடியில் தள்ளுவதை உறுதிப்படுத்த சீனா அதன் பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தும்.
இந்தியாவின் கவலைகள் என்ன?
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்தியாவின் மூலோபாய நலன்கள் மற்றும் பாதுகாப்புக் கவலைகளை இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணிலிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை சீன கப்பலின் வருனை தீவிரமான கவலைக்குரிய விடயமாக உள்ளது, ஏனெனில் சீனா இந்தியப் பெருங்கடலில் உண்மையில் அதன் கடற்படை தடத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை கொண்டுள்ளது.
கம்போடியாவில் ரீம் கடற்படைத் தளம், மியான்மரில் கியாக்ஃபியு துறைமுகம், வங்காள விரிகுடாவில் கோகோ தீவு உள்கட்டமைப்பு மேம்பாடு, இலங்கையில் ஹம்பாந்தோட்டை, பாகிஸ்தானின் குவாடர், ஈரானில் ஜாஸ்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா துறைமுகம், ஜிபூட்டி என எல்லா இடங்களிலும் சீன துறைமுகங்கள் உள்ளன.
இது இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதால் கவலைகள் எழுந்துள்ளன.
எதிர்காலத்தில், சீனா இந்த துறைமுகங்களை கடல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும்.
இந்தியா என்ன செய்ய முடியும்?
கடந்த ஆண்டு பாலிஸ்டிக் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது.
இது ஒரு இராணுவ கண்காணிப்பு கப்பல் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது.
ஒடிசாவின் பாலாசோரில் இந்திய ஏவுகணை சோதனை நடத்துவதை இது முக்கியமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சீன மக்கள் கடற்படையின் எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஷி யான் 6 கடல் படுகையில் கண்காணித்து பரிசோதனை செய்து வருகிறது.
2025ம் ஆண்டிலேயே இது நடக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் கடற்படை விரிவாக்கம் குறித்து இந்தியா கவலைப்படக் காரணம் இதுவே ஆகும்