வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு
(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி சொற்பொழிவாற்றினார் .
தொடர்ந்து மாணவர்களின் கையெழுத்துப் சஞ்சிகைகளையையும் அவதானித்துடன் நூலகப்புத்தகங்களையும் பார்வையிட்டதோடு எதிர்காலத்தில் சிறுவர் நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் இ.பி.எஸ்.ஐ இணைப்பாளர் ஏ.றாசிக் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பழையமாணவர்கள்இபெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.











