நாவிதன்வெளியில் வீட்டு மனைகளின் பொருளாதாரத்தை உயர்த்த பழமரக் கன்றுகள் வழங்கி வைப்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டு மனை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் பழ மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலுக்கு அமைய உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் தலைமையில் விதாதா வள மத்திய நிலையத்தில் (23) நடைபெற்றது.
பிறன்டினா நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிறன்டினா நிறுவனத்தின் முகாமையாளர் கே.கோபிகரன் வியாபார முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.ரூபன் கலந்து கொண்டதுடன் திருமதி.சமேதா கீர்த்தனன் வீட்டு பொருளாதாரத்தை உயர்த்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் விதாதா வெளிக்கள இணைப்பாளர் கே.நவநீதன், சுற்றாடல் உத்தியோகத்தர் கே.சிறீகரன், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.பிரசன்னா உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிறன்டினா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





