பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம்
பாறுக் ஷிஹான்
பசுமையான கல்முனை மாநகர மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் 150 பயன் தரு மரங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன.
கல்முனை மாநகரை அழகு படுத்தும் நோக்குடன் கல்முனை தலைமையக பொலிஸார் இன்று குறித்த திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றதுடன் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக, கல்முனைஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக்,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகரும் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஐயூப்,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குமாரி பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்காலத்தில் சூழலை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பொது இடங்கள் கடற்கரைப் பிரதேசங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மத ஸ்தாபனங்கள் வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.




















