இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது.
அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் பின்வருமாறு இடம்பெறவுள்ளது.
0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 12 ரூபாய் ஆகும்.
31 முதல் 60 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 30 ரூபாய் ஆகும்.
61 முதல் 90 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவில் இருந்து 480 ரூபாவாகவும், 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1000 ரூபாவில் இருந்து 1180 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..
மேலும், 121 முதல்180 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1,500 ரூபாவில் இருந்து 1,770 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் நிலையான கட்டணம் 2,000 ரூபாவில் இருந்து 2,360 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..
இன்று முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மின் கட்டண அதிகரிப்பு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு அலகுக்கான கட்டணங்கள் மேலே காட்டப்பட்டுள்ளன.