தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்!
எட்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கபபட்ட அச்சுறுத்தலை கண்டித்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அன்றைய தினம் நடிகர் விஜய் நடித்த புதிய திரைப்படமும் வெளிவருகிறது.
ஹர்த்தால் இடம்பெறும் 20 ஆம் திகதி விஜயின் திரைப்படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம் எனும் கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று தமிழ் தேசிய கட்சிகளின் பெயருடன் சமூக வலைத்தளங்களில் உலாவிவருகிறது.
இது போலியான கடிதம் எனவும் அதேவே
ளை ஹர்த்தாலுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
