நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்!
(அபு அலா)
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இன்று புதன்கிழமை (18) காலை 10.00 மணிக்கு திருகோணமலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திலிருந்து ஆளுநர் செயலகம் வரை குறித்த போராட்டம் பேரணியாக இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் சிற்றுழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



