பாறுக் ஷிஹான்
கல்முனையில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் இன்று அழிக்கப்;பட்டது.
கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது மனித பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலைகள் சோதனை செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கமைய சான்று பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த 90 மூடைகளில் உள்ளடங்கியிருந்த சுமார் 2250 கிலோ கிராம் எடையுடைய கொத்தமல்லிகள் மண்ணெண்ணெய் இட்டு கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இதன் போது நீதிமன்ற அதிகாரிகள், அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை உத்தியோகத்தர்கள், பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்கள், உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்