கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.!
(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் நிறுவும் வேலைத் திட்டம் திங்கட்கிழமை (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், வி.சுகுமார், எம்.ஏ.நிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.நௌசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்தின் பிரகாரம் முதற்கட்டமாக கல்முனை மக்கள் வங்கி சந்தி முதல் தரவைக் கோவில் சந்தி வரையான இருபக்க போக்குவரத்து பாதையின் நடுவே பூச்சாடிகளை வைத்து அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





