கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம்
2023.10.07 தொடக்கம் 2023.10.09 வரை காலியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே போட்டியில் கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கேதீஸ்வரன் ரோகித் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவினர்களுக்கிடையிலான கும்மிட்டே போட்டியில் வெங்கலபதக்கம் வென்று பாடசாலைக்கும்,,கல்முனை கல்வி வலையத்திற்கும் பயிற்று வித்த JKMO சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம் மாணவன் 36 வீரர்களுடன் போட்டியிட்டு 3ஆம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவ்விளையாட்டினை அர்ப்பணிப்போடு பயிற்றுவித்த கராத்தே வீரரும் ஆசிரியருமான பாலுராஜ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்து பயிற்றுவித்த,
Sensei S.Shopanaraj (Sports Coach),
மற்றும் பாடசாலை உடற் கல்வி ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள், பிரதி அதிபர்கள், மற்றும் பாடசாலை முதல்வர் (Rve.Bro.E.S.Rejinoald FSE)
ஆகியோருக்கும் இந்நிகழ்வுக்கு ஆக்கமும்,ஊக்கமும் வழங்கி உதவியவர்களுக்கும்.
பண உதவி வழங்கிய A M ரியாஸ்க்கும்
J K M O சங்கம் நன்றிகளைத் தெரிவித்தன.

