-S. அதுர்ஷன்-
பெரியநீலாவணை “Next Step” சமூக அமைப்பு ஆன்மீக பணிகளை விரிவாக்கும் நோக்குடன் அம்பாறை மாவட்ட சிவநெறி பேரவையுடன் இனைந்து சில அறநெறி பாடசாலைகளுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
கல்முனை இந்து இளைஞர் அறநெறி,பெரியநீலாவணை சுவாமி விபுலானந்தர் அறநெறி,தெய்வசேக்கிழார் அறநெறி,திலகவதியார் அறநெறி என்பனவற்றுக்கு சென்ற குழுவினர் ஆன்மீக கருத்துக்கள், பஜனைகள் என்பனவற்றிலும் ஈடுபட்டனர்.
பெரியநீலாவணை சுவாமி விபுலானந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவினையும் வழங்கினர். அதோடு தெய்வசேக்கிழார் அறநெறிக்கு ஒரு மாதத்திற்கான போசாக்கு உணவுக்கான நிதி உதவியையும் வழங்கினர்.
ஒய்வு பெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் கண. வரதராஜன்,சிவசிறி சிசுபாலன் ஐயா,கலாச்சார உத்தியோகத்தர் தி.குணநாயகம், NEXT STEP தலைவர் ந.சௌவியதாசன்,செயலாளர் வி. கார்த்திக் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்ட குழுவில் அடங்குவர்.















