வைத்தியசாலையில் தீ விபத்து! சுகாதாரக் குழுவினர், தீயனைப்புப் படை, பொலிசார் களத்தில்,
அபு அலா –
திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரிவரிகையில், வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு சத்தமொன்று கேட்டதையடுத்து இவ்வாறு தீப்பரவல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீ விபத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்கலுமில்லை எனவும் தீ பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த தீ விபத்தில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாகச் சென்று களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடனடி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.











