கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணிகளை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சில தனியார் அபகரிக்கும் செயற்பாடுகள் தொடந்தவண்ணமே உள்ளன. இதனால் இரு சமூகங்களுக்கும் இடையில் முறுகல் நிலைகளும் ஏற்படுகிறது.
மழை காலத்தில் வெள்ளம் ஊருக்குள் தேங்காது வடிந்து செல்லும் தோணா என அழைக்கப்படும் குறித்த அரச காணிகளை தனியார் அபகரிக்க கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஒத்துழைப்பாக உள்ளதா? கல்முனை பொலிஸ் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
