அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு….
-ம.கிரிஷாந்-
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்றைய தினம் (28.09.2023) வழங்கிவைக்கப்பட்டது.
ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில்.
இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தினம்(28) அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு பிரபஞ்சம் செயற்றிட்டத்தின் ஊடாக அண்ணளவாக ஆறு மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் வண்டி வழங்கப்பட்டது.
இதற்கான சாதகமாக செயற்பாடுகளை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர் உதயகுமார் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் பிராந்திய இணைப்பாளர் வெ.வினோகாந்த் ஆகியோர் முன்னெடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



