உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வீதி நாடகம் மற்றும் வீதி ஊர்வலம் 18.09.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் Dr.A.G.M ஜுராச் , வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் Dr.J.மதன் மற்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ,வைத்தியசாலையின் கணக்காளர் தாதிய பரிபாலகர் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையுடன் ஆரம்பமானது, மேலும் மனநல வைத்திய நிபுணரின் விழிப்புணர்வு உரையும் . தொடர்ந்து மனநல பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் Dr.U.L சராப்டீனின் விழிப்புணர்வு உரையும் இடம்பெற்றது. தொடர்ந்து வீதி நாடகமானது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களான V.குலோந்திரகுமார் ,திருமதி. T.பாஸ்கரதாஸ்,திருமதி. R.ஜெயானி, S.தேவகுமார், திருமதி ஜெயந்தினி S.ஸ்ரீதரன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தடுப்பு தொடர்பான எண்ணக்கருவும் மனச்சோர்வு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய எமது வைத்தியசாலையின் தொடர்பு இலக்கம் “1926” பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய நாடகத்தினை தொடர்ந்து வீதி ஊர்வலம் ஆரம்பமானது.
இவ் ஊர்வலமானது கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை பேரூந்து நிலையத்தில் வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டு கல்முனை பொலிஸ் வீதி வழியாக வைத்தியசாலையை அடைந்தது. அதனை தொடர்ந்து நன்றியுரை மனநல பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் .அழகரெட்ணம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.


















