இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தப்போது இடம் பெற்று வருகிறது.
பாஞ்சாலி தேவியைப் பற்றி கல்முனையைச் சேர்ந்த கவிஞர் பூவை சரவணன் எழுதிய கவி
தீயோரை தீய்த்துவிடு!
-பூவை சரவணன்-
பிரபஞ்சம் முழுக்க
பழிமிஞ்சி ஏங்குதம்மா
பாஞ்சாலி நின்வரவால்
தீய்ந்தொழிந்தார் தீயோரே
குறைகளைய என்தாயே
குவலயத்தில் வாருமம்மா
குலமாதர் குலம்காக்க
கொம்பனையே வாருமம்மா
ஐவருக்கும் தேவிநீ
ஆக்ரோஷ நாயகியே
கரம்கூப்பி தொழுகின்றோம்
கனவில் உதித்தவுனை
மெய்யை மினுக்கி
மேதினியில் வாழ்வோரை
நெய்யப் புடைத்து
நீள்நெருப்பில் எறிந்துவிடு
தீயில் உதித்தநீயே
தீயோரை தீய்த்துவிடு
வாய்மை தவறியோரை
வதைத்து அழித்துவிடு
அரசியலில் பிழைத்தோர்கள்
அரங்கேற்றம் காணுகின்றார்
காலங்காலமாய் இவர்கள்
கதைபல பேசுகின்றார்
பாண்டிதர் பதியமர்ந்த
பத்தினியே திரௌபதையே
வேண்டுதலை தீர்த்துவிடு
வேதவல்லி நாயகியே!
