தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (23) தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஒன்றாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இவ்விசேட பயிற்சி நெறியானது கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம் பஸால் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வை பொது சுகாதார மாதுக்கள் மற்றும் பொது சுகாதார மாதுக்கள் என கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இந்நிகழ்வில் தொழுநோயை கண்டறிவதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறைமை தொழுநோயை கட்டுப்படுத்துவதற்காக சமூக நிறுவனங்களின் பங்களிப்பை பெறுவதற்கான வழிமுறைகள் என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன




