மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 33வது ஆண்டு நினைவு இன்றாகும். (21.09.2023)
கடந்த 1990 அம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு இராணுவ சீருடை அணிந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து தங்களது வீட்டில் உறங்கிக்யெகாண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பி தாங்கள் இராணுவத்தினர் என்றும் ஊரை சுற்றி வளைத்துள்ளதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி பெண்கள் ஆண்கள் முதியவர்கள் உட்பட 45 பேரை கடற்கரை ஓரத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் வெட்டி படுகொலை செய்துகொண்டிருக்கும் வேளை இளைஞர் ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பியோட அவசர அவசரமாக துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு ஊர்காவற்படையினர் தப்பியோடிவிட்டனர். இதன்போது இவர்களினால் 17 பேர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
33, ஆண்டுகள் கடந்தும் இதுவரை நீதி கிடைக்கவில்லை
நினைவுகள் தொடரும்..!
-பா.அரியதேத்திரன்-21/09/2023-