2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(17/09/2023) கமு/கமு/பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் அதிபர் திரு.s.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான பூரண அனுசரனை கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது. இதில் வளவாளராக திரு.k. செந்தில்நாதன் கலந்து கொண்டார்,, மேலும் இன்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் விரிவுரையாளர் திரு.k. சுரேஸ் மற்றும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் செயலாளர் திரு.s.சிறிகரன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்







