உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு!
உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விழிப்பு நிகழ்வு 11.09.2023 அன்று இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உளவியலாளர் திருமதி சம்ருத் ஷெரிப்டின் ( Uk), வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் Dr.A.G.M ஜுராச் , வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் Dr.J.மதன் மற்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாதிய பொறுப்பு உத்தியோகத்தர. அழகரட்ணத்தின் வரவேற்புரையை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளரின் தலைமை உரையும் அதனை தொடர்ந்து உளவியலாளர் அவர்களின் தற்கொலை தடுப்பு தொடர்பான விரிவுரை மற்றும்,வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணரின் தற்கொலை தடுப்பு தொடர்பான விளக்ககாட்சிப்படுத்தல் மற்றும் மனநல பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் Dr UL சராப்டீனின் தற்கொலை தடுப்பு தொடர்பான விரிவுரையும் இடம் பெற்று நிகழ்வு நிறைவடைந்தது.













