-புவிராஜா-
பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு!
அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பாண்டிருப்பு அறிஞர் அண்ணாமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பம்சமாக காலை பாற்சோறு வழங்கியதுடன் பிற்பகல் 3மணியளவில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன
.இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்….விஷேட நிகழ்வுகளாக கவியரங்கு,பேச்சு மற்றும் நடன நிகழ்வுகளுடன் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற சில குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கான துணிவகைகளும் அவர்களது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…
எதிர் காலத்தில் மேலும் பல சமூக முன்னேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு பழமையான அண்ணா மன்றத்தின் செயற்பாட்டுக்கு தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் மன்றத்தின் செயலாளர் அ.கமலநாதன் தெரிவித்தார்.



