கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் :சைவ மகா சபை அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள்!
கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வடாந்த உற்சவம் 02.09.2023 அன்று ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்று வருகிறது எதிர்வரும்14.09.2023 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
உற்சவ காலத்தில் கல்முனை சைவ மகாசபை அறநெறி பாடசாலை மாணவர்களினால் மாலை 6.30 மணிக்கு சொற்பொழிவுகள், கதை கூறல், பேச்சு, பஜனை என ஆன்மீக நிகழ்வுகள் இடம் பெற்று வருகிறது.
கல்முனை சைவ மகாசபையின் தலைவரும் அறநெறிப் பாடசாலையின் அதிபருமான திரு. அரசரெத்தினம் அவர்களின் வழிநடத்தலில் அறநெறிப்பாடசாலை ஆசிரியை திருமதி ஜனனன் திவ்யாவின்,ஆசிரிய ஆலோசகர் சரோஜினி நோனிசப்பு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆலய நிருவாகசபையின் ஒத்துழைப்புடன் சிறப்பான திட்டமிடலுடன் மாணவர்களினால் இந்த ஆன்மீக நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.





