ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் அமைப்பிற்கு புதிய நிருவாக கட்டமைப்பு உருவாக்கம்!
ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள், சமய நிகழ்வுகளில் சமூகத்தை நன்நெறிப்படுத்தும் ஆன்மீக சொற்பொழிவுகளை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் நிகழ்த்தி வருகிறது.
மிகவும் ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் இவ் அமைப்பின் நிருவாக கட்டமைப்பு உருவாக்கும் கூட்டம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
விபரம்
தலைவர், ஸ்தாபகர் சிவஸ்ரீ க.வி.பிரமீன் சர்மா
பொதுச்செயலாளர் சோ.தினேஸ்குமார்
பொருளாளர் J.மோகன்.
அம்பாரை மாவட்ட. உப தலைவர் சதிரு லக்குணம்
செயலாளர் தமிழகரன் சனாதனன்
இணைப்பாளர் தா.பிரதீபன்







