கல்முனை ஆதார வைத்தியசாலை ஊடாக உள நல ஆலோசனை மையத்தின் சேவைகள் விஸ்தரிப்பு _1926 இலக்கத்துக்கு அழைத்து சேவைகளை பெறலாம்
கல்முனை ஆதார வைத்தியசாலை உளநல ஆலோசனை மையத்தின் சேவைகளை 1926 எனும் இலக்கத்தின் ஊடாக வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விபரிக்கும் சந்திப்பு நேற்று சனிக்கிழமை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
1926 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளும் போது உள நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள்,தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.
வைத்தியசாலையின் கல்விப் பிரிவு பொறுப்பாளர் சிரேஷ்ட்ட தாதிய உத்தியோகத்தர் எஸ். அழகரெத்தினம் ஆரம்ப உரையாற்றினார்.
கல்முனை ஆதாரவைத்திய சாலையின்
உளநல வைத்திய நிபுணர் டாக்டர் ஏ. ஜி. எம். ஜூறைச், சிரேஷ்ட்ட உளநல மருத்துவ அதிகாரி டாக்டர் யூ. எல். சராப்டீன், உள்ள நல மருத்துவர் டாக்டர் எம். ஏ அனீஸ் அகமட், மருதத்துவ அதிகாரி டாக்டர் பி. தாசிஸ் ஆகியோரும் உளநல சிகிச்சை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
1926 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும் அத்தனை விடயங்களும் இரகசியம் காக்கப்படும். பரீட்சை தோல்வி, குடும்ப உள பிரச்சனைகள், போதைப் பொருள் பாவனை, உளநல பிரச்சனைகள் என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த விடயங்களை பாடசாலை மட்டங்கள் , அலுவலகங்கள், எனைய பொது அமைப்புக்கள் , கிராமங்கள் என அனைவரிடமும் தெரியப்படுத்தி தேவையானோர் பயன்பெற உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது