பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு!
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை -1B பகுதியிலுள்ள இஸ்லாமிய றிலிப் எனும் தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் கழிவு நீரை அகற்றுவதற்குரிய வழிமுறைகள் செய்யப்படாததால் அக்குடியிருப்பிற்கு செல்லும் பாதை,மற்றும் குடியிருப்பு பகுதியின் பின்புறமும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இச்சூழலில் துர்நாற்றம் வீசுவதாலும் சிறுவர்கள் குழந்தைகள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.எனவே இதற்கான தீர்வை பெற்றுத்தர அரசாங்கமோ, சமூகநலன் விரும்பிகளோ முன்வரவேண்டும் என பெரிய நீலாவணை NEXT STEP சமூக சேவை அமைப்பு கோரிக்கை முன்வைக்கின்றனர்.


