பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP!
பெரிய நீலாவணை கிராமத்தில் குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஆக்கபூர்வமான சேவைகளை செய்து வரும் NEXT STEP கழகத்தின் மற்றும் ஒரு செயற்பாடாக
பெரியநீலாவணை இந்துமயானத்தில் NEXT STEP கழகத்தின் அனுசரனையில்
அமரர் செல்வரெட்ணம் நவரெட்ணம் ஞாபகார்த்த இறுதி அஞ்சலி மண்டபமும் இந்து மயான நுழைவாயில் பாதையும் அன்னாரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டு வைபவ ரீதியாக 23/08/2023 மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டட்டது.
இந்நிகழ்வில் அமரர் செல்வரெட்ணம் நவரெட்ணம் ஞாபகார்த்த அஞ்சலி மண்டபம் அன்னாரது 25 வது ஆண்டு நினைவாக அன்னாரது துணைவியார் திருமதி நவரெட்ணம் விஜயலெட்சுமி மற்றும் அன்னாரது புதல்வர் திரு ந.ருக்மாங்கதன் அவர்களாலும் ஞாபகார்த்த நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அமரத்துவமடைந்த ஏரம்பு தங்கமணி தம்பதிகளின் நினைவாக அமைக்கப்பட்ட நுழைவாயில் பாதைக்கான ஞாபகார்த்த நினைவுக் கல் அவர்களது பிள்ளைகளால் மற்றும் குடும்பத்தினரால் திரை நீக்கம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டது .
இந் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி மண்டப நுழைவாயில் பாதையினை திறந்து வைத்த NEXT STEP சமுக அமைப்பின் தலைவர் திரு ந. சௌவியதாசன், சிரேஸ்ட ஆலோசகர் (ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் ) திரு கண.வரதராஜன் ஐயா அவர்களுக்கும்
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து அஞ்சலி மண்டபம் திறந்து வைத்த பெரியநீலாவணை ஸ்ரீ மகா விஸ்ணு பேச்சியம்மன் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் , பரிபாலன சபை உறுப்பினர்கள் , ஆலயடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் மற்றும் பரிபாலன சபை உறுப்பினர்கள், ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் அனைவருக்கும்,
இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த பொது அமைப்புக்கள் சார் , சமுக அமைப்புக்களின் மற்றும் விளையாட்டக்கழகங்களின் தலைவர் மற்றும் அதன் பிரதிநிதிகள் அனைவருக்கும்,
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் திரு சோ .குபேரன் , மற்றும் கமு/ விஸ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு சுதர்சன் , பொது மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்
இந்த நிகழ்வில் பக்கபலமாக நின்று செயற்பட்ட NEXT STEP இளைஞர் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் next step நன்றிகளை தெரிவித்தனர்.




