கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!
தேவை உடைய 15 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டன.
இது இவ் அமைப்பின் இரண்டாம் கட்ட மாதாந்த உதவித்திட்டமாகும்.
இந்நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
சமூக சேவை உத்தியோகத்தர் திரு.S.சந்திரகுமார் பிரதம அதிதியாகவும், சிறப்பதிதியாக நன்கொடையாளரும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் மகளீர் பிரிவு தலைவியுமான திருமதி.ஷரேன் பியுமி(பிரான்ஸ்) அவர்களும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் திரு.J.ஜெயப்பிரகாஸ், செயலாளர்.திரு.S.ஸ்ரீகரன். பொருளாளர்,திரு.S.யுவசந்தராஜா அவர்களும் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய சமூகசேவை உத்தியோகத்தர் திரு.S.சந்திரகுமார் அவர்கள் “தாராள உள்ளங்கள் அறக்கட்டளையானது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறந்த சமூகசேவையாற்றி வருவதுடன் எமது மக்களின் வாழ்வாதார, கல்வி உதவித்திட்டங்களை ஆற்றி வருகின்றமையை பாராட்டியதுடன் தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை செய்யவேண்டும் எனவும் கூறினார்.










