கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!
அபு அலா –
கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாணினால் இதுகுறித்த விடயத்தை முன்வைத்தார்.
இதன்போது, கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளார்.