மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி அதிகாரத்தை வழங்கியிருந்தார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு மீண்டும் நடத்தப்படவுள்ளது.
இந்திய தூதுவர் தமிழ் கட்சிகளிடம் 13 தொடர்பில் தாங்கள் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் இந்திய தூதரக அதிகாரியின் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் வடக்கு கிழக்கிலாவது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தான் வலியுறுத்த உள்ளதாக கூறினார்