தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டது!
தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புணரமைப்பு கூட்டம் காரைதீவுப்பிரதேச தமிழரசு கட்சியின் செயலாளர் க. செல்வபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அவர்களும் காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் காரைதீவு பிரதேச தமிழரசுக் கட்சியின் தலைவருமான கி.ஜெயசிறில் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
1,2,5 வட்டாரம் செயலாளர் எஸ் கணேஷ். தலைவர் க.தட்சிணாமூர்த்தி . பொருளாளர் எஸ்.பாஸ்கரன். 6,7,10 வட்டாரம் செயலாளர் க.செல்வபிரகாஷ். தலைவர் த.மோகனதாஸ். பொருளாளர் 𝕃.𝔸.ரமேஷ் குமார். 3,4,8,9 வட்டாரம் செயலாளர் 𝕐.கோபிகாந். தலைவர் கி.ஜெயசிறில். பொருளாளர் க.யோகன் . 11,12 வட்டாரம் தலைவர் – V.சிவகுமார்,செயலாளர்- G.தங்கவடிவேல் பொருளாளர். – சிறியன் ஆகியோரும் தெரிவாகினர்.




