அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா!
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா 22.07.2023 நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திருமதி தியாகேஸ்வரி ரூபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் பிரதம அதிதியாகவும் , கௌரவ அதிதிகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் A . C. A அஸிஸ், உதவிக் கல்விப்பணிப்பாளர், ஊடகர் வி. ரி. சகாதேவராஜா,அரச சார்பற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் I. L. M. இர்பான், அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஆலோசகர் சட்டத்தரணி திருமதி துளாஞ்சனி அருந்தவராஜா, அம்பாரை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை திருமதி ஜெனிதா மோகன் , நன்றி உரையை திருமதி டெலினா றொசைரோ ஆகியோர் வழங்கினர்.











