இலங்கை மீண்டும் செப்டெம்பர் மாதமளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொருளதார நிபுணர், பேராசிரியர் அமிந்த மெட்சிலா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இவ்வாறான நிலை ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் அமிந்த மெத்சில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் 39 வீத பொருளாதார மீட்சி ஒப்பந்தங்கள் மே மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய போதிலும், அரசாங்கம் 10 வீதத்தையே நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறுகிறார்.