இலங்கை ரூபாவின் பெறுமதியில் உண்மையில் என்ன நடக்கும்?
பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயற்சி செய்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை இந்த வருட இறுதிக்குள் தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம்.
மத்திய வங்கி மேற்கொண்டுள்ள முயற்சி
இலங்கை தனது வெளிநாட்டுகடன்களை செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளது. பல பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தியுள்ளது. இவை இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளிற்கு எதிரானது.
இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாலேயே உலக நாடுகள் இதற்கு இணங்கியுள்ளன. கடந்த மூன்று நான்கு வருடங்களா நாங்கள் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவில்லை. இப்படியே நாங்கள் தொடரமுடியாது, கடந்த 18 மாதங்களாக எங்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்பநிலையை காண்கின்றோம்.
பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயல்கின்றது. எரிபொருளிற்கான தேவை குறைக்கப்பட்டுள்ளது. இது செயற்கையான விதத்தில் முன்னெடுக்கப்பட்டது .
எனினும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டதும் நாங்கள் புதிய சவால்களை எதிர்கொள்வோம் கட்டுப்பாட்டு சூழலை இந்த வருட இறுதிக்குள் முடிவிற்கு கொண்டுவரவேண்டும். அதன் பின்னரே இலங்கை நாணயத்தின் உண்மையான பெறுமதி தெரியவரும்.நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சி அவசியம் என தெரிவித்துள்ளார்.