கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!
அபு அலா
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” உத்தியோகபூர்வமாக (16), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
திருகோணமலை முதலமைச்சர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

