பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு!
-பா. மேனன் –
அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை வெஸ்டன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சீருடைகளை அமரர்.திரு. செல்வரெட்ணம் நவரெட்ணம் அவரது துணைவியார் திருமதி. நவரெட்ணம் விஜயலெட்சுமி (ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தர் ) அவர்கள் வழங்கி வைத்தார். குறித்த சீருடைகளுக்கான நிதியை அவரது புதல்வரும் வெஸ்டன் விளையாட்டு கழக உறுப்பினருமான திரு.ந.ருக்மாங்கதன் (இலங்கை மின்சார சபை மின்மாணி வாசிப்பாளர் ) அவர்கள் வழங்கியிருந்தார். குறித்த நிகழ்வில் அமரர் செ.நவரெட்ணம் அவர்களின் மைத்துனர் ஓய்வு நிலை நிருவாக உத்தியோகத்தர் திரு.சோ.குபேரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
அன்னாரின் குடும்பத்தார்க்கும்,நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை வெஸ்டன் விளையாட்டுக்கழகம் தெரிவித்தது.





